Monday,11th of June 2013
சென்னை::சந்தானம் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘வாலிப ராஜா’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
‘கண்ணா லட்டுத் தின்ன ஆசையா’ படத்தில் அறிமுகமான சேது மற்றொரு நாயகனாக இந்த படத்தில் நடிக்கிறார்.
சந்தானம், சேது இருவரும் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். அந்த படத்தில் நாயகியாக நடித்த விசாகா சிங் இந்த படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். (பாவம்…பவர் ஸ்டார் மட்டும் மிஸ்ஸிங்) . மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
‘கோ, மாற்றான்’ படங்களில் இயக்குனர் கே.வி. ஆனந்திடம் அசோசியேட் இயக்குனராகப் பணி புரிந்த சாய் கோகுல் ராம்நாத் இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.
சந்தானம் மனோதத்துவ டாக்டராக நடிக்கிறார். காதல், காமெடி, குடும்பம் என அனைத்து தரப்பினரையும் கவரும் விதத்தில் படம் தயாராகப் போகிறது. ரதன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் வரும் 19ம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
Comments
Post a Comment