வசூலில் சாதனை படைக்கும் தனுஷின் 'ராஞ்ச்ஹனா'!!!

25th of June 2013
சென்னை::தனுஷ் மற்றும் சோனம் கபூர் இணைந்து நடித்துள்ள ராஞ்ச்ஹனா திரைப்படம் ரிலீஸான முதல் வாரத்தில் ரூ.11 கோடி வசூலாகி சாதனை படைத்துள்ளது. ராஞ்ச்ஹானா படம் கடந்த ஜூன் 21-ந் தேதி ரிலீசானது. ரிலீஸான மூன்று நாட்களில் ரூ.11 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. வசூலானது முதல் நாளை விட இரண்டாம் நாள் அதிகமாகவும், இரண்டாம் நாளை விட மூன்றாம் நாள் அதிகமாகவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படம் தனுஷ் நடித்துள்ள முதல் ஹிந்தி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments