17th of June 2013
சென்னை::கோச்சடையான்’ படம் இப்போ ரீலீஸ்... அப்புறமா ரிலீஸ்... என்று வெளியிடும் தேதி சூயிங்கமாய் இழுத்துக் கொண்டே செல்கிறது. படவெளியீடு தள்ளிக்கொண்டே செல்வதால் ரசிகர்களை குஷிப்படுத்த ரஜினி திடீரென்று தித்திப்பு முடிவு ஒன்று எடுத்து இருக்கிறாராம்.
‘கோச்சடையான்’ அனிமேஷன் வேலைகள் இழுத்துக் கொண்டே செல்வதால் ரிலீஸ் தீபாவளியைத் தாண்டி போனாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அதனால் ‘கோச்சடையான்’ ரிலீஸுக்கு முன்பாக அவசர அவசரமாக ஒரு புதுப்படத்தில் நடித்து இரண்டே மாசத்தில் அந்தப்படத்தை வெளியிட முடிவு செய்து இருக்கிறாராம் ரஜினி.
கே.எஸ். ரவிக்குமாரை அழைத்த ரஜினி, ‘முத்து’, ‘படையப்பா’ பாணியில் கதை ஒன்றைத் தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். அந்த படத்தின் படப்பிடிப்பு இரண்டே மாதத்தில் முடியவேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டு இருக்கிறாராம்.
சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பின்பு ரஜினியின் உடல் தளர்ந்துவிட்டது என்று சிலர் கிளப்பிவிடும் வதந்திகளை உடைத்து போடப்போகிறாராம். இதற்காக புதுப்படத்தில் ஸ்பெஷலாக சண்டைக்காட்சி அமைக்கும்படி கேட்டுக் கொண்டு இருக்கிறாராம்.
இப்போது ரஜினியும், ரவிக்குமாரும் ரகசியமாய் ரூம் போட்டு புதுப்படம் குறித்து டிஸ்கஷன் செய்து கொண்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments
Post a Comment