சித்தார்த் நடிக்கும் ‘ஜிகர்தன்டா’ இன்று ஆரம்பம்!!!

12th of June 2013
சென்னை::பீட்சா’ வெற்றிப் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்க, சித்தார்த், லட்சுமி மேனன் நடிக்கும் படமான ‘ஜிகதர்தன்டா’ இன்று மதுரையில் படப்பிடிப்புடன் ஆரம்பமானது.
 
‘ஆடுகளம்’ படத்தை தயாரித்த கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பை இன்று இயக்குனர் வெற்றிமாறன் ஆரம்பித்து வைத்தார்.
 
மதுரையில் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பின் சென்னையில் படமாக்கப்பட உள்ளது.
சித்தார்த் தற்போது தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் 20வது படம் இது.
 
சித்தார்த் நடித்துள்ள ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ நாளை மறுநாள் 14ம் தேதி வெளிவருகிறது.
 
போன வருஷம் ராயலா ‘பீட்சா’ அப்ப  இந்த வருஷம் லோக்கலா ‘ஜிகர்தன்டா’வா….
‘ஜிகர்தன்டா’ ….மதுரைக்காரங்களுக்கு மட்டுமில்ல…மத்தவங்களுக்கும் சேர்த்து இனிக்கட்டும்….

Comments