Thursday,6th of June 2013
சென்னை::நடிகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களுக்கு இடையே, கடுமையான போட்டியும், பொறாமையும் நிலவி வந்த காலம் எல்லாம், இப்போது மலையேறி விட்டது. ஒருவருக்கு ஒருவர், உதவுவது, பாராட்டுவது என, ஆரோக்கியமான சூழல் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், தான் இசையமைத்த, "மரியான் படத்தில், தனுசுக்காக, ஒரு பாடலை பாடுவதற்கு, யுவன் சங்கர் ராஜாவுக்கு அழைப்பு விடுத்தார், ஏ.ஆர்.ரகுமான். யுவனும், உடனடியாக ஸ்டூடியோவுக்கு வந்து, அந்த பாடலை பாடி கொடுத்தார். இப்போது, யுவன் சங்கர் ராஜா முறை. அஜீத் நடிக்கும் படத்துக்கு, இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா, அந்த படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை பாடுவதற்காக, ரகுமானுக்கு அழைப்பு விடுத்துள்ளாராம். இந்த சம்பவம், கோலிவுட்டில் ஆச்சரியமாக பேசப் படுகிறது.
Comments
Post a Comment