கவர்ச்சியாக நடிக்க தயார்: -இனியா!!!

12th of June 2013
சென்னை::மெளன குரு, வாகைசூட வா, அம்மாவின் கைப்பேசி, சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை இனியா. சமீபத்தில் நடிகர் ராம்கியுடன் மாசாணி படத்தில் நடித்தவர் இப்போது ரெண்டாவது படம், புலிவால் போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி இதோ...

* "மாசாணியாக  நடித்த  அனுபவம் பற்றி?
வாய்ப்பு கிடைக்குமென்று, நான் எதிர்பார்க்கவில்லை. அதிலும், ஆவியாக வந்து பழி வாங்குவது போல் நடித்தது, புதுமையான அனுபவமாக இருந்தது.  இது மாதிரி, இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்.

* ராம்கி போன்ற சீனியர்  நடிகர்களுடன் நடிப்பது  மைனசா, ப்ளசா?


அந்த கதைப்படி பார்த்தால், அது மைனசாக தெரியவில்லை. அவர், இப்போதும் இளமையாகத் தான் இருக்கிறார். எனக்கு நடிப்பு பற்றி, நிறைய டிப்ஸ்களை கொடுத்தார். அவருடன் நடித்தது, என்னைப் பொறுத்தவரை ப்ளஸ் தான்.

* ஹீரோயினாக நடிக்கும் போது,  கேரக்டர் ரோல்களிலும் நடிப்பதேன்?


மனதை தொடும் கேரக்டர் என்கிறபோது, நான் தவிர்ப்பதில்லை. அப்படி, "சென்னையில் ஒரு நாள் படத்தில், நான் நடித்த கேரக்டரைப் பார்த்துவிட்டு ரஜினி சாரே என்னை பாராட்டினார்.

* முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேராதது ஏன்?


வாய்ப்பு வராதது தான் காரணம். "வாகை சூடவா படத்தில் நடித்த பின்,  பாரதிராஜா பட வாய்ப்பு கிடைத்து, கை நழுவி போனது. அந்த அதிர்ச்சி காரணமாக, அடுத்து மலையாளப் படங்களில் நடிக்க சென்று விட்டேன். அந்த இடைவெளிகூட, தமிழில் முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளை தடுத்திருக்கும் என, நினைக்கிறேன்.

* இனியா கிளாமராக நடிக்க மாட்டார் என்றொரு கருத்து உள்ளதே?


ஆரம்பத்தில், கிளாமராக நடிக்க வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அதுவே பட வாய்ப்புகளுக்கு தடையாகி விடும் என்பதால், மிதமான கவர்ச்சியாக நடிக்கும் மனநிலைக்கு மாறினேன். "கண்பே”ம் வார்த்தைகள் படத்தில் ஷாட்ஸ் அணிந்து நடித்தேன். ரசிக்கத் தகுந்த கிளாமர் காட்டி நடிக்க, எப்போதும் நான் தயாராகவே இருக்கிறேன்.

Comments