கஞ்சா கருப்பு ஹீரோவாக நடித்துள்ள 'மன்னார் வளைகுடா' ரிலீஸுக்கு தயார்!!!

Monday,10th of June 2013
சென்னை::காமெடி நடிகர் கஞ்சா கருப்பு, கதையின் நாயகனாக நடித்துள்ள 'மன்னார் வளைகுடா' படம் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. கருப்பு மீது யார் கண் பட்டதோ, படத்தைப் பற்றி எந்த தகவலும் இல்லாமல் போன மன்னார் வளைகுடா படம் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது என்றும், படம் விரைவில் வெளியாக உள்ளது என்றும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லகக்ஷயா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் கதையின் நாயகனாக கஞ்சா கருப்பு நடிக்க, இவருடன் மற்றொரு ஹீரோவாக ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜெர்ஸி பேக்ஸ் ஆலன் நடித்துள்ளார். நாயகிகளாக சந்திரா லூயிசா, அமி மகேந்திரா மற்றும் காவேரி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சாம்ஸ்.ஏ.ஏ.கஸ்ஸாலி ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் நடித்து வெளிநாட்டு நடிகர் ஜெர்ஸி, தமிழில் பேசி நடித்து தமிழனாக வாழ்ந்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தென் மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது. இராமேஸ்வரம், பாம்பன் பாலம், சாயல்குடி, தனுஷ்கோடி மற்றும் ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று பிரமாண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் புதிய தொழில்நுட்பமான ஆரோ சவுண்ட் சிஸ்டம் முறையும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கதை, திரைக்கதை எழுதி தனசேகரன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் ஆர்.மாதேஷிடன் உதவி இயக்குநராக பணியாற்றவர் ஆவார். எஸ்.சிவபிரகாசம் இசையமைக்க, என்.வெங்கட் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் விரைவில் வெள்ளித் திரையில் வெளியாக உள்ளது.

Comments