ஷங்கர் படத்துக்காக தமிழ் வசனம் பேச திணறும் எமி ஜாக்ஸன்!!!

17th of June 2013
சென்னை::லண்டன் நடிகை எமி ஜாக்ஸன் ஷங்கர் படத்தில் தமிழ் வசனம் பேச படாத பாடுபடுகிறார்.
‘மதராசபட்டினம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்ஸன்.
 
தற்போது ஷங்கர் இயக்கும் ‘ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். பல மாதங்களாக ஷங்கர் இயக்கத்தில் நடித்து வந்தாலும் தமிழ் வசனங்கள் பேச சிரமப்படுகிறார். பாடல் காட்சி, காதல் காட்சிகளில் வசன காட்சி குறைவு என்பதால் சமீபகாலமாக சமாளித்து வந்தவர் தற்போது சென்டிமென்ட் காட்சிகளில் உணர்ச்சிகரமாக பேச வேண்டிய காட்சிகள் படமாக உள்ளது.
 
இதனால் எமி வசனம் பேசுவதற்கு சிரமப்படுகிறார். இதையடுத்து அவருக்கு முதல் நாளே வசனங்கள் எழுதி தரப்படுகிறது. ஷூட்டிங் வருவதற்கு முன்பே ஒத்திகையில் வசனத்தை மனப்பாடம் செய்து வந்து நடிக்கிறார். ஆனால் அதையும் சரியாக பேசாமல் திணறுகிறாராம்.

இதுபற்றி எமி கூறும்போது,வசனங்கள் பேசுவது எனக்கு சவாலாக இருக்கிறது. ஷங்கர், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உதவியால் தப்பில்லாமல் பேச முடிகிறது. நிறைய விஷயங்களை ஐ ஷூட்டிங்கில் கற்றுக்கொண்டேன். இன்னும் சில மாதங்களில் ஷூட்டிங் முடிந்துவிடும் என்றார்.

Comments