13th of June 2013
சென்னை::கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ளது காசிகவுண்டன்புதூர். நடிகர் சிவக்குமாரின் சொந்த ஊரான இங்கு நேற்று வேல்மூர்த்தி பரமசிவன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கோவை கவுமார மடாலயத்தைச் சேர்ந்த குமரகுருபர சுவாமிகள் விழாவை துவங்கி வைத்தார். சிவகுமார் தலைமை வகித்தார். கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகள் முடிவடைந்து மஹா கும்பாபிஷேக விழா நடந்தது.
பொதுமக்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சிவக்குமார், மனைவி லட்சுமி, மகன்கள் சூர்யா, கார்த்தி மகள் பிருந்தா ஆகியோருடன் சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் திருப்பணிக்குழு மற்றும் காசிகவுண்டன்புதூர் ஊர்ப்பொதுமக்கள் சார்பில் பரிவட்டம் கட்டி சிறப்பித்தனர். சூர்யா, கார்த்தியை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

Comments
Post a Comment