மரியான் படத்திற்காக வெளிநாட்டு இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்த ரஹ்மான்!!!

Saturday,1st of June 2013
சென்னை::மரியான் படத்தின் பாடல்கள் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் அப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், படத்தின் பின்னணி இசை கோர்ப்புக்காக, தனது வெளிநாட்டு இசை நிகழ்ச்சியை ஒத்தி வைத்துள்ளார்.

ரஹ்மானின் இந்த தாராள மனதையும், இவ்வளவு பெரிய உற்சத்திற்குப் போனாலும், ரஹ்மான் ஒரு படத்திற்கு உழைப்பதையும் பார்த்து அசந்துப்போன தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி கூறும்போது, "மரியான் படத்தின் இசை கடந்த சில வருடங்களாக தமிழ்த் திரை உலகம் கேட்டிராத மாபெரும் இசையாகும். இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க உரியர் ஏ.ஆ.ரஹ்மான் மட்டும் தான்.

இதை தவிர படத்தின் பின்னணி இசை கோர்ப்புக்காக இரவு பகலாக அயராது உழைத்து தன்னுடைய வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளையும் ஒத்தி வைத்து இதுதான் தன்னுடைய முதல் படம் போல பாவித்து பணி புரிவதை பார்க்கும் போது பிரமிப்பு அடைந்தேன். வெறும் திறமை மட்டும் நம்மை உச்சத்தில் உட்கார வைக்காது அதற்குடிய உழைப்பும் தொழில் பக்தியும் வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் ஏ.ஆர்.ரஹ்மான் தான்." என்று கூறியுள்ளார்.

குறிப்பு : ரஹ்மான் மற்றும் ரவிச்சந்திரனைப் பற்றி செய்தி எழுதிவிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் புகைப்படத்தை மட்டும் போட்டிருக்கிறோம் என்று யோசிக்க வேண்டாம். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் எந்த விழாவிலும் கலந்துகொள்ள மாட்டார், அதேபோல அவரை புகைப்படம் எடுக்கவும் அனுமதிக்க மாட்டார் அதனால் தான்.

Comments