தமிழ் சினிமாவை மும்பைக்கு இழுக்கும் பிரகாஷ்ராஜ்!!!!

Saturday,1st of June 2013
சென்னை::முதல் மனைவி லலிதாகுமாரியை விவாகரத்து செய்து விட்டு, பாலிவுட் நடன மாஸ்டர் போனிவர்மாவை திருமணம் செய்து கொண்ட பிரகாஷ்ராஜ் இப்போது மும்பையைத்தான் தனது தலைமையிடமாக்கிக் கொண்டுள்ளார். என்னதான் இந்திப்படங்களில் நடித்தபோதும், தென்னிந்திய சினிமாவில் அவருக்கிருக்கிற மார்க்கெட் அங்கு இல்லை. என்றாலும், இங்கு வந்து நடித்து விட்டு உடனே மும்பைக்கு பறந்து விடுகிறார். அதோடு, எந்தவொரு படப்பிடிப்புக்கும் அவர் குறித்த நேரத்தில் வருவதே இல்லை என்றொரு புகாரும் உள்ளது.

அந்த வகையில், விஜய்யுடன் தற்போது தலைவா படத்தில் நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், பல நாட்களில் தாமதமாகத்தான் படப்பிடிப்புக்கு வந்தாராம். அதோடு மட்டுமின்றி, டப்பிங் பேசுவதற்கு இதோ அதோவென்று அலைய விட்டுக்கொண்டிருந்தாராம். ஒருவழியாக அவரை பிடித்து டப்பிங் தியேட்டருக்கு கொண்டு சென்றபோது, சென்னையில் தியேட்டர்கள் சரியில்லை. அதனால் மும்பைக்கு வாருங்கள் அங்கே பேசி தருகிறேன் என்று அழைத்து சென்று விட்டாராம்.

இப்படி தான் நடிக்கும் பெரும்பாலான பட யூனிட்டை மும்பைக்கு அழைக்கும் பிரகாஷ்ராஜ், மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு என்றால் உடனே கால்சீட்டும் கொடுக்கிறாராம். இதனால், அவரை புக் பண்ணுபவர்கள், அவருக்கான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டிருந்தாலும், பிரகாஷ்ராஜின் மனநிலைக்கேற்ப மும்பையிலேயே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார்களாம்.

Comments