ஒரே சமயத்தில் 8 படங்களை தயாரிக்கப் போகும் ரவீந்தர் சந்திரசேகர்!!!

18th of June 2013
சென்னை::மந்தமாக சென்றுக்கொண்டிருக்கும் தமிழ் சினிமாவில், அவ்வப்போது திடீர் பூகம்பம் போல சில கார்ப்பரேட் நிறுவனங்கள் தோன்றி, வரிசையாக பல படங்களை தயாரித்து வருவார்கள், பிறகு தொடர் தோல்விகளால் தாக்குபிடிக்க முடியாமல் துண்டை காணோம், துணிய காணோம் என்று ஓட்டம் பிடிப்பார்கள். கார்ப்பரேட் நிறுவனமோ அல்லது அயல்நாட்டு தொழிலதிபர்களே தமிழ் சினிமாவில் வெற்றிப் பெற்றதாக சரித்திரம் இல்லை, என்பதை மாற்ற வந்திருப்பவர் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர்.

அயல்நாட்டில் பணிபுரியும் தமிழரான இவர், தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்து வருகிறார். நாம் மேலே சொன்னதை, அப்படியே இவருக்கு ஒரு ஆசாமி, அட்வைசாக சொல்லியிருக்கிறார். அதையெல்லாம் கேட்டுக்கொண்ட ரவீந்தர், பிறகு மேலும் பல படங்களை தயாரிக்க முடிவெடுத்தாராம். சினிமாவில் தனக்கு பின்புலமாக யாரும் இல்லை என்றாலும், அதில் தான் கண்டிப்பாக வெற்றிப் பெறுவேன், என்ற முடிவோடு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் ரவீந்தர் சந்திரசேகர், தமிழ்ப் படங்கள் வெளியாகாத, சில வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான வியாபாரம் என்ன என்பதையும் அறிந்து வருகிறார்.

இவர் தயாரிக்கும் பல படங்களில் 'சுட்டக் கதை' படமும் ஒன்று. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (ஜூன் 17) சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. முழுக்க முழுக்க புதுமுகங்கள் உருவாக்கியிருக்கும் இப்படம், புதுமையான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் நாசர் முக்கியமான ஒரு வேடத்தில் நடிக்கிறார்.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரவீந்தர் சந்திரசேகர், "நான் சினிமாவுக்கு வந்து முதல் படம் தயாரித்துக்கொண்டிருக்கும் போது, "வெளிநாட்டு பணக்காரர்கள் இந்த சினிமாவுக்கு நெறையப் பேர் வந்துள்ளார்கள். ஆனால், அவர்கள் யாரும் வெற்றி பெற்றதிலை. 50 வருட சின்மா வலராற்றில், என்.ஆர்.ஐ தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட எந்த படமும் சரி, அவர்களும் சரி தோல்வி தான் அடைந்திருக்கிறது. அப்படி இருக்க உங்களுக்கு ஏன் இந்த வீண் வேலை" என்று ஒருவர் அட்வைஸ் சொன்னார், ஆனால், அதை கேட்ட பிறகே நான், மேலும் பல படங்களைத் தயாரிக்க திட்டமிட்டேன்.

நான் தயாரிக்கும் படங்களின் இசை வெளியீட்டை ஜெனிவாவில் வைத்தேன், அந்த நிகழ்ச்சிக்குண்டான செலவில் நான் ஐந்து படங்களே எடுத்திருக்க முடியும், அப்படியிருக்க ஏன் அங்கு வைத்தேன் என்றால், தமிழ் சினிமாவை வேறு ஒரு தடத்திற்கு எடுத்துச்செல்ல நினைக்கிறேன். நியூஸிலாந்த் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தமிழ்ப் படங்கள் வெளியாவதில்லை. ஆனால், அங்கு தமிழ்ப் படங்களுக்கு என்று ஒரு வியாபாரம் இருக்கிறது, அதற்காக்தான் ஜெனிவாவில் இசை நிகழ்ச்சியை நடத்தினேன். எனது அடுத்தப் படத்தின் இசை வெளியீட்டை நியூயார்க்கில் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதேபோல, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள இன்வெஸ்ட்டர்கள், லிப்ரா புரொடக்ஷனுடன் இணைந்து 8 படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இப்படங்களுக்கான அறிவிப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்." என்று தெரிவித்தார்.

Comments