ஷாம் நடிக்கும் படம், ‘6’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள இப்படம் குறித்து ஷாம்!!!

Sunday, June 16, 2013
சென்னை::வி.இசட்.துரை இயக்கத்தில் ஷாம் நடிக்கும் படம், ‘6’. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ள இப்படம் குறித்து ஷாம் கூறியதாவது: மூன்று வருட கடுமையான உழைப்பில் உருவாகியுள்ள ‘6’ படத்துக்காக, எனது கண் புருவங்களை இயற்கையாகவே வீங்க வைத்து, சிக்ஸ்பேக் உடற்கட்டைக் கொண்டு வந்தேன். பிறகு நீண்ட தலைமுடி, தாடி, மீசை வளர்த்தேன். கிட்டத்தட்ட ஒரு தேடல் மிக்க நாடோடியாகவே வாழ்ந்தேன் என்றே சொல்ல வேண்டும்.
 
இரண்டு வருடங்களாக எந்த பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் தலைமறைவாக இருந்தேன். இப்போது படம் அருமையாக வந்திருப்பதைப் பார்த்ததும், நான் பட்ட எல்லா கஷ்டமும் தீர்ந்துவிட்டது. என் திரையுலக பயணத்தில் ‘6’ மிகவும் முக்கியமான படமாக இருக்கும். இந்தப் படத்தை முடிக்கும்வரை வேறு படத்தை ஒப்புக்கொள்ளாமல் இருந்தேன். அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது.
 
ஸ்டுடியோ 9, அபி அன்ட் அபி, வி.ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து வெளியிடுகின்றன. ‘கிக்’ மூலம் தெலுங்கில் என்னை அறிமுகம் செய்த சுரேந்தர் ரெட்டியுடன் ‘ரேஸ் குர்ரம்’ படத்தில் மீண்டும்இணைந்துள்ளேன். தெலுங்கில் எனக்கு தனி இடம் கிடைத்துள்ளது. அதனால் தான் ‘6’ படத்தை அங்கும் வெளியிடுகிறோம்.

Comments