Monday,11th of June 2013
சென்னை::விளம்பரப் படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் சம்பளத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய்விடும் என்பது நிச்சயம்.
திரைப்பட நட்சத்திரங்கள் நடிக்கும் விளம்பரப் படங்கள் என்றால் அதற்கு வரவேற்பு அதிகமாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
இந்திய அளவில் ஹிந்தி நட்சத்திரங்கள்தான் கோடிக்கணக்கான சம்பளம் வாங்குகிறார்கள் என மும்பை, விளம்பர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விளம்பரப் படங்களில் நாள் ஒன்றுக்கு நடிப்பதற்காக நட்சத்திரங்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?
அமீர் கான் – 5 கோடி
அக்ஷய் குமார் – 3.5 கோடி
சல்மான் கான் – 3 கோடி
ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப், கரீனா கபூர் – 1. 5 கோடி
தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா – 1 கோடி
இது விளம்பரப் படங்களில் நடிப்பதற்கு மட்டுமான தொகையாம். ஒரு நிறுவனத்திற்கான விளம்பர தூதுவராக இருப்பதற்கு இதைவிட அதிகமான தொகை என்கிறார்கள்.
இந்தியாவில் விளம்பர சந்தை என்பது கோடிக்கணக்கான ரூபாய் புரளும் சந்தை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
தொலைக்காட்சிகளில் விரைவில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிடம் மட்டுமே விளம்பரம் ஒளிபரப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு விரைவில் வர இருப்பதால், இனி தொலைக்காட்சிகளில் விளம்பரத்திற்கான கட்டணங்கள் அதிகமாகும் என்று தெரிகிறது.
Comments
Post a Comment