17th of June 2013
சென்னை::மாதுரி தீட்சித்தை எங்களுக்கு தாருங்கள், காஷ்மீரை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று மாதுரி தீட்சித் இந்தி சினிமாவில் உச்சத்தில் இருந்த போது பாகிஸ்தான் மாதுரி ரசிகர்கள் இப்படி சொன்னார்கள்.
சினிமாவில் ஒரு மகாராணியைப் போல் வீற்றிருந்த போதுகூட முத்தக்காட்சி போன்ற நெருக்கமான விஷயங்களை முடிந்தவரை தவிர்த்து வந்தவர், 46 வயதான நிலையில் முத்தம் தர சம்மதித்திருக்கிறார்.
விஷால் பரத்வாஜ் தயாரிக்கும் புதிய படத்தில் அர்ஷத் வர்ஸியுடன் மாதுரி தீட்சித் நடிக்கிறார். சமீபத்தில் வெளியான செய்திபடி, அர்ஷத் வர்ஸிக்கு மாதுரி உதட்டோடு உதடு பதித்து முத்தம் தரும் காட்சி படத்தில் இடம்பெறுகிறதாம். முத்தம் தர மாதுரியும் தயார் என்பதுதான் ஆச்சரியம்.
திருமணமாகி அமெரிக்காவில் குழந்தைகள் கணவர் என செட்டிலானவர் இந்த வயதில் முத்தம் தர சம்மதிக்கிறார் என்றால், கதைக்கு அது ரொம்ப அவசியமாகதான் இருக்கும் என மாதுரி ப்ரியர்கள் இப்போதே புகை போடுகிறார்கள்.
இப்படியே பேசிக் கொண்டிருந்தால் முத்தக்காட்சியிலிருந்து மாதுரி தனது உதட்டை பின்வாங்கினாலும் வாங்கலாம். சைலண்டாகவே காத்திருப்போம், என்ன நடக்கிறது என்று.
Comments
Post a Comment