29th of June 2013
சென்னை::மாஜி நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா ப்ளஸ் -2 படித்த கையோடு சினிமாவில் திறமை காட்ட வந்து விட்டார். அதுவும் எடுத்தோம் கவுத்தோம் என்று என்ட்ரி கொடுக்காமல், சிறிய வயதிலிருந்தே சினிமாவுக்காக தயார் செய்யப்பட்டு, முறையான நடிப்பு பயிற்சிகள் எடுத்துக்கொண்டே சினிமாவில் இறக்குமதியானார்.
அப்படி தனது 17 வது வயதில் தெலுங்கில் நாகசைதன்யா நடித்த ஜோஷில் என்ற படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. தமிழ், இந்தியில் அப்போது கார்த்திகாவுக்கு ஆபர் இருந்தும் தெலுங்குதான் தனது சென்டிமென்ட் சினிமா உலகம் என்று அங்கே அறிமுகம் செய்தார் ராதா. ஆனால், அப்படி கார்த்திகா நடித்த முதல் படம் தோற்று ராதாவின் சென்டிமென்டை தகர்த்து விட்டது.
அதனால், அடுத்தபடியாக தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கிய கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். அந்த படம் ஓரளவு வெற்றி பெற்றதால் தமிழில் ராசியான நடிகையானார் கார்த்திகா. ஆனால், அதன்பிறகு பல படங்கள் தேடிவந்தும், வந்த படங்களையெல்லாம் குற்றம் குறை சொல்லி திருப்பி விட்டதால், அதையடுத்து கோலிவுட் இயக்குனர்கள் கார்த்திகாவை நிராகரிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில்தான், தன்னை அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகம் செய்த பாரதிராஜாவின் அன்னக்கொடி படத்தில் கார்த்திகாவுக்கு சான்ஸ் வாங்கினார் ராதா. கிராமத்து வாசனையே இல்லாமல் வளர்ந்த கார்த்திகா, ஆடு மேய்க்கும் பெண்ணாக அப்படத்தில் நடித்தார். இன்று வெள்ளிக்கிழமை அந்த படமும் திரைக்கு வருகிறது. இதனால் மிகுந்த சந்தோசத்தில் இருக்கிறார் கார்த்திகா. இந்த படத்தில் என்னை வித்தியாசமான கோணத்தில் காண்பித்திருக்கிறார் பாரதிராஜா. அதனால் எனது நடிப்பாற்றலை பார்த்து விட்டு, வெயிட்டான கதாபாத்திரங்கள் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் இருந்தும் எனக்கு கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்.
Comments
Post a Comment