சிங்கம் 2’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்!!!

 27th of June 2013
சென்னை::பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹரி இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம், விவேக் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சிங்கம் 2’.
 
இப்படத்திற்கு சென்சார் போர்டு அனைவரும் பார்த்து ரசிக்கக் கூடிய ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது.
 
அடுத்த மாதம் ஜுலை 5ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 2400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
 
ஏற்கெனவே, அனைத்து ரசிகர்கள் மத்தியிலும், சூர்யா ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
2010ல் வெளிவந்த ‘சிங்கம்’ அந்த வருடத்திய மிகப் பெரிய வசூல் சாதனை செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது.
 
அதே போல் இப்படமும் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments