21st of June 2013
சென்னை::மலையாளத்தில் மோகன்லால் – சுரேஷ்கோபி, ஷோபனா நடித்த படம் மணிசித்திரதாழ். இப்படத்தை கன்னடத்தில் ஆப்தமித்ரா என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி.வாசு. அதையடுத்து தமிழில், சந்திரமுகி என்ற பெயரில் மீண்டும் ரீமேக் செய்தார் வாசு. மலையாளம், கன்னடத்தைவிட பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது அப்படம். முக்கியமாக, சந்திரமுகியாக கண்களை உருட்டி, ரசிகர்களை மிரட்டும் பேயாக நடித்த ஜோதிகா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த நிலையில், முதன்முதலில் மலையாளத்தில் வெளியான மணிசித்திரதாழ் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது படமாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அப்படத்திலும் மோகன்லால்- ஷோபனா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்களாம். அப்படத்துக்கு கீதாஞ்சலி என பெயரும் வைத்து விட்டார்களாம்.
அதனால், தமிழிலும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என்று சிலர் ரஜினி தரப்பை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். வருடக்கணக்கில் கோச்சடையான் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அதற்கு முன்னதாக சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை கொடுக்க ஏற்கனவே யோசித்துக்கொண்டிருக்கும் ரஜினியின் மனக்கண்ணில் இப்போது சந்திரமுகி பேய்தான் அடிக்கடி வந்து செல்கிறதாம். விரைவில் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள்.
Comments
Post a Comment