தில்லு முல்லு 2’ இயக்குனர் பாலசந்தர் பாராட்டு!!!

17th of June 2013
சென்னை::1981ம் ஆண்டு ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன்  நடித்து வெளிவந்த ’தில்லு முல்லு’ படத்தை இந்த காலத்திற்கேற்ப வேறு விதமாக ரீமேக் செய்து வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
 
புதிய ‘தில்லு முல்லு 2’ படத்தை பழைய ‘தில்லு முல்லு’  படத்தை இயக்கிய பாலசந்தர் பார்த்து ரசித்தார். படக்குழுவினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
 பாலசந்தர் படம் பார்த்த பின் பேசியதாவது, “
இந்த தில்லு முல்லு படம் எனக்கே புதுசா இருக்கு நிறைய மாற்றங்கள் பண்ணிருக்காங்க மாடர்ன் ஆகவும் இருக்கு அதே சமயம் அனைவரும் பார்க்கும் விதமாகவும் அமைத்திருக்கிறார்கள்.
 
இது மிகப் பெரிய அளவில் கமர்ஷியல் படமாக அமைந்துள்ளது அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இசை அற்புதமாக வந்துள்ளது. சிவா மிக அருமையாக நடித்துள்ளார்.
கொஞ்சம் கூட பழைய தில்லு முல்லு படத்தின் சாயலே இல்லாமல் இந்த காலத்திற்கு ஏற்ப மிக அற்புதமாக உருவாக்கியுள்ளார் பத்ரி. இது ஒரு மிக பெரிய வெற்றிப் படம்.
தயாரிப்பாளர் வேந்தர் மூவிஸ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என தெரிவித்தார்.
 
 

Comments