Sunday, June 16, 2013
சென்னை::ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்கும் ‘சிங்கம் 2’ படத்தில் ஆங்கில நடிகர் ‘டானி சபானி’ (Danny Sapani ) வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இயக்குனர் டானி பாயல் இயக்கி சமீபத்தில் வெளிவந்த ‘டிரான்ஸ்’ படத்தில் மிகச் சிறப்பாக நடித்தவர்.
டிரான்ஸ், மெர்சினாரிஸ், தி ஆக்ஸ்ஃபோர்டு மர்டரர்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்திய திரைப்படத்தில், அதுவும் தமிழ்த் திரைப்படத்தில் ‘சிங்கம் 2’ படத்தில்தான் அவர் இங்கு அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டானி சபானி லண்டன் மாநகரில் 1970ம் ஆண்டு பிறந்தவர். சென்டிரல் ஸ்கூல் ஆப் ஸ்பீச் அன்ட் டிராமா -வில் பயிற்சி பெற்றவர். அவருடைய அயராத உழைப்பால் நாடகத்திலும், பின்னர் சினிமாவிலும் சிறந்த நடிகராக உயர்ந்தார்.
பல தொலைக்காட்சித் தொடர்களில் கௌரவ வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
‘சிங்கம் 2’ வில் இவரது நடிப்பில் ஒரு வித்தியாசமான வில்லனைப் பார்க்கலாம் என்கிறார்கள் படக்குழுவினர்.
Comments
Post a Comment