24th of June 2013
சென்னை::முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜிவி பிரகாஷ்குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி வியாழக்கிழமை சென்னையில் நடக்கிறது.‘வெயில்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர், ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் அக்கா மகன் ஆவார்.

கிரீடம், மதராச பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள், தாண்டவம், பரதேசி, தலைவா ஆகிய படங்களுக்கும் ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார். பாரதிராஜா, மகேந்திரன் போன்ற இயக்குநர்களின் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.இவருக்கும், சினிமா பின்னணி பாடகி சைந்தவிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். இவர்கள் திருமணத்துக்கு இருவரது பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள்.
அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தம் நடந்தது.ஜீ.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி திருமணம் வருகிற 27-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் மண்டபத்தில் நடக்கிறது. மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி, அன்று மாலை 6-30 மணிக்கு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இருதரப்பு குடும்பத்தினரும் கவனித்து வருகிறார்கள்.
Comments
Post a Comment