ஜூன் 23ல் 'பட்டத்து யானை' ஆடியோ வெளியீடு!!!


19th of June 2013
சென்னை::குளோபல் இன்ஃபோடெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரித்து வரும் படம் ‘பட்டத்து யானை’. விஷால், நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா ஜோடியாக நடித்து வரும் இப்படத்தை பூபதி பாண்டியன் இயக்கி வருகிறார். படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிவடைந்துள்ள நிலையில் படத்தின ஆடியோ வெளியீட்டு விழாவை வருகின்ற 23-ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடத்த இருக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசை அமைத்திருக்கிறார். படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments