Wednesday,5th of June 2013
சென்னை::ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்த படம் சிங்கம். இந்த படத்தில் அனுஷ்காதான் நாயகியாக நடித்திருந்தார். அருந்ததி புகழ் அனுஷ்காவை வெறும மரத்தை சுற்றி மட்டுமே டூயட் பாட வைத்திருந்தனர். என்றாலும், வெற்றி பெற்ற படத்தில் அவரும் இருந்தார். மேலும், அந்த செண்டிமென்ட் காரணமாகவே இப்போது சிங்கம்-2 படத்திலும் அனுஷ்காவை நடிக்க வைத்துள்ளனர்.
ஆனால், இந்த முறை படத்தை தமிழ்நாட்டில், இந்தியாவில் நடக்கும் கதையாக இல்லாமல் வெளிநாட்டிலும் நடப்பது போல் கதை பண்ணியுள்ளாராம் ஹரி. அதனால், அனுஷ்கா பகுதி ரொம்ப சிறியதாகி விட்டதாம். அதேசமயம், படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஹன்சிகாவின் கேரக்டர்தான் கதையையே நகர்த்தி செல்கிறதாம். இதனால் அவருக்குத்தான் கதையில் அதிக முக்கியத்துவமாம்.
இதை போகப்போக தெரிந்து கொண்ட அனுஷ்கா, பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை தெரிந்து கொண்டு பீல் பண்ணியிருக்கிறார். அதோடு, சில நாட்களில் தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்ததும் ஆந்திராவுக்கு சென்று விட்டாராம். அதையடுத்து சிங்கம்-2வை படம் என்னாச்சு? ஏதாச்சு? என்பது பற்றிய விவரங்களை கேட்பதில்கூட அவர் ஆர்வம் காட்டவில்லையாம். அதேசமயம், ஹன்சிகாவோ, சேட்டை கவிழ்த்து விட்ட தன்னை சிங்கம்-2 கைகொடுத்து காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் உற்சாகமாய் இருக்கிறார்.

Comments
Post a Comment