Monday,3rd of June 2013
சென்னை::சிங்கம் 2ம் பாகம் முடிந்தது. 3ம் பாகத்திலும் நடிக்க தயார் என்றார் சூர்யா. சிங்கம் படத்தின் 2ம் பாகத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. டைரக்ஷன் ஹரி. இதுபற்றி சூர்யா நேற்று கூறியதாவது: சிங்கம் 2ம் பாகம் டிரெய்லர் பார்த்தபோது இதன் 3ம் பாகத்திலு
ம் நடிக்க தயாராகிவிட்டேன்.
ஹரி ஸ்கிரிப்ட் உருவாக்கினால் அதிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.
சினிமா ஒரு மேஜிக் என்பது இப்போது நிரூபணமாகி இருக்கிறது. 2010ம் ஆண்டு சிங்கம் ரிலீஸ் ஆனபோது 2ம் பாகம் பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை. அப்படத்தின் வெற்றிதான் இதை நிர்ணயித்தது. அதே நேரம், சிங்கம்-2 என்பதும் சாதாரணமான விஷயமாக அமையவில்லை. முதல் பாகத்தை எளிதாக செய்துவிட்டோம். அந்த வெற்றியை தக்கவைக்க வேண்டுமே என்ற நிலை சிங்கம்-2வில் ஏற்பட்டது. இதில் பணியாற்றியவர்களின் கடின உழைப்பால் அந்த வெற்றி சாத்தியமாகும் சூழல் உருவாகி இருக்கிறது.
முதல் பாகத்தில் அனுஷ்கா நடித்திருந்தார். 2ம் பாகத்தில் அனுஷ்காவுடன் ஹன்சிகாவும் இணைந்திருக்கிறார். ஒரு சர்வதேச கும்பல் பற்றிய கதையாக உருவானதால் தென் ஆப்ரிக்கா, மலேசியா போன்ற நாடுகளில் ஷூட்டிங் நடந்துள்ளது. தேவி ஸ்ரீபிரசாத் இசை. விவேகா பாடல்கள். பிரியன் ஒளிப்பதிவு. எஸ்.லட்சுமண் குமார் தயாரிப்பு.
Comments
Post a Comment