28th of June 2013
சென்னை::நடிக்க வருவதற்கு முன், யோகா டீச்சராக பணியாற்றியவர், அனுஷ்கா. தமிழ், தெலுங்கில், தற்போது அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், நல்ல கதையம்சம் உடைய, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்கிறார்.
தற்போது, தமிழ், தெலுங்கில் தயாராகும், "ராணி ருத்ரம்மா தேவி என்ற படத்தில், ராணி ருத்ரம்மா கேரக்டரில் நடிக்கிறாராம். ராணி வேடம் என்பதால், குதிரையேற்றம், வாள் வீச்சு போன்ற பயிற்சிகளை பெற வேண்டியிருந்ததாம். இதனால், இதற்கென பிரத்யேக பயிற்சியாளர்களை பணிக்கு அமர்த்தி, இந்த வித்தைகளை கற்றுக் கொண்டாராம்.
படத்தில், ஆக்டிவ்வாக தோன்ற வேண்டும் என்பதற்காக, கடுமையான உடற் பயிற்சிகளை செய்து, எடையை, 15 கிலோ குறைத்து, கம்பீரமாக, அசல் ராணி போலவே காட்சி அளிக்கிறாராம்.
Comments
Post a Comment