19th of June 2013
சென்னை::தமிழ் சினிமாவில் வில்லன், காமெடியன், குணசித்திர நடிகர் என, பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருப்பவர், வினுசக்கரவர்த்தி. சிவாஜி கணேசன் துவங்கி, இன்றைய சிம்பு வரை, அனைத்து நடிகர்களின் படங்களிலும் நடித்துவிட்ட அவருக்கு,

லாரன்ஸ் இயக்கிய, “முனி 1,000 வது படமாகும். ஆனால், அந்த படத்திற்கு பின், விபத்தில், முதுகெலும்பில் அடிபட்டு, லண்டனில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, சென்னை வந்துள்ள அவர், நீண்ட இடைவெளிக்கு பின், ஒரு படத்தில் நடிக்க, சம்மதித்துள்ளார்.
இது, அவரின் 1,001வது படம் என்ற போதும், முதல் படமாக எண்ணி நடித்து வருகிறாராம். இதைத் தொடர்ந்து, இதுவரை நடிக்காத மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக சொல்லும் வினுசக்கரவர்த்தி, “சினிமாவில், அழுது நடிப்பதை விட, காமெடியாக நடிப்பதுதான் கஷ்டம் என்று, தன் அனுபவத்தை சொல்கிறார்.
Comments
Post a Comment