கமல் இயக்கி, நடிக்கும் புதிய படம்!!!

Friday,24th of May 2013
சென்னை::விஸ்வரூபம் 2’ படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் புதிய படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் குறித்து திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குனர் லிங்குசாமி கூறுகையில்,
 
நானும் கமல்ஹாசன் அவர்களும் ஒரு புதிய படத்தின் மூலம் இணைய இருக்கிறோம். இப்படம் வரும் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இப்படத்தை கமல்ஹாசன் இயக்கி, நடிக்கிறார்.
 
நாங்கள் கமல்ஹாசனை சந்தித்து எங்கள் நிறுவனத்துக்காக படம் எடுக்க வேண்டும் என்று கேட்டோம், அவர் சம்மதித்து மூன்று கதைகளை சொன்னார். அவற்றில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னார்.
 
மூன்றுமே நல்ல கதைகள்தான், இருந்தாலும் அதில் சிறந்த ஒன்றை தேர்வு செய்துள்ளோம். நான் இத்துறைக்கு வருவதற்கு கமல்தான் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர். இப்போது அவரை வைத்தே படம் தயாரிப்பது பெருமையான ஒன்று.
இந்த படம் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் ஒன்றைக அமையும்.
 
எனக்கும் அவரை இயக்க ஆசை உண்டு, ஆனால் இப்போது இந்த புதிய படத்தின் மீதுதான் கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்த படத்திற்கான மற்ற நட்சத்திரத் தேர்வுகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பின்னர் தேர்வு செய்யப்படும், ”என்றார்.

Comments