தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன மலையாள நடிகர் படத்தில் மீண்டும் நடிக்க வந்த வாய்ப்பை ஆண்ட்ரியா உதறினார்!!!

Thursday,2nd of May 2013
சென்னை::தன்னைக் காதலிப்பதாகச் சொன்ன மலையாள நடிகர் படத்தில் மீண்டும் நடிக்க வந்த வாய்ப்பை ஆண்ட்ரியா உதறினார். மலையாள இளம் ஹீரோ பஹத் பாசில். இவர் இயக்குனர் பாசிலின் மகன். இவருடன் ஆண்ட்ரியா ‘அன்னயும் ரசூலும்‘ என்ற படத்தில் நடித்தார். இது ஹிட்டானது. இதையடுத்து மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த பஹத், ‘இந்தப் படத்தில் நடித்தபோது ஆண்ட்ரியாவுடன் அதிகமாக பேசவில்லை. ஆனால் எடிட்டிங்கிற்காகச் சென்னை வந்தபோதுதான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக உணர்ந்தேன். அவரை தீவிரமாகக் காதலிக்கிறேன்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவரது காதலை ஆண்ட்ரியா ஏற்க மறுத்து மற்றொரு பத்திரிகையில் பேட்டிக் கொடுத்தார்.

இந்நிலையில் இரண்டு பேரையும் ‘நார்த் 24 காதம்’ என்ற படத்தில் மீண்டும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நடிக்க ஆண்ட்ரியா மறுத்துவிட்டார். மீண்டும் சேர்ந்து நடித்தால் காதல் ஆசையை பஹத் மீண்டும் எழுப்பலாம் என்பதால்தான் அவர் நடிக்க மறுத்தார் என்று கூறப்படுகிறது. ஆண்ட்ரியா தரப்பில் விசாரித்தபோது, ‘கால்ஷீட் பிரச்னை காரணமாகத்தான் அவர் நடிக்கவில்லை. வேறு காரணம் ஏதுமில்லை. தற்போது ‘லண்டன் பிரிட்ஜ்’ என்ற மலையாளப் படத்தில் மட்டுமே அவர் நடிக்கிறார்’ என்று தெரிவித்தனர்.

Comments