கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தனுஷ்! மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார்!!!

Friday,24th of May 2013
சென்னை::நடிகர் ரஜினியை இயக்க போவதாக கூறப்பட்டு வந்த டைரக்டர் கே.வி.ஆனந்த், இப்போது அவரது மருமகனும், நடிகருமான தனுஷை இயக்க போகிறார். "அயன்", "கோ" போன்ற வெற்றி படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த், அடுத்தபடியாக "மாற்றான்" படத்தை எடுத்தார். ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக சூர்யா நடித்து வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இதனால் அடுத்து தான் இயக்கும் படத்தை மெகா ஹி‌ட் படமாக கொடுக்கும் முடிவில் களம் இறங்கி இருக்கிறார் கே.வி.ஆனந்த். இதற்காக ரஜினியிடம் பேசி வந்தார். ரஜினியும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கப்போவதாகவும், அப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது கே.வி.ஆனந்த், ரஜினியை இயக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. மாறாக ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷை இயக்கபோகிறார் கே.வி.

இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, நான் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிப்பது உண்மை தான். படத்திற்கான தலைப்பு, ஹீரோயின் உள்ளிட்ட மற்ற டெக்னீஷியன்கள் தேர்வு நடந்து வருகிறது. அது முடிந்தவுடன் ஆகஸ்ட் 4ம் தேதி இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிறது என்று கூறியுள்ளார்.

தற்போது தனுஷ், தனது முதல் இந்தி படமான ராஞ்சனாவிற்கு சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார். இதுபோக தமிழில் சற்குணம் இயக்கும், "நய்யாண்டி" படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்த பிறகு ஆகஸ்ட் மாதம் முதல் கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்க இருக்கிறார்.
 
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான கே.வி. ஆனந்த் ஸ்ரீகாந்த் நடித்த ‘கனா கண்டேன்’ , சூர்யா நடித்த ‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.
 
இந்த படத்தில் நாயகனாக நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை மற்ற கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
தனுஷ் தற்போது, ‘மரியான், நய்யாண்டி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ‘ராஞ்சனா’ என்ற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாகிறது.

Comments