நேரடி ’டீலிங்’ ஓவியா!!!

Monday,27th of May 2013
சென்னை::நடிகை ஓவியா வை தொடர்பு கொண்டால், செல்போனில் அவரே பேசுகிறார். ஓரிரு படங்கள் நடித்தவர்கள் கூட மேனேஜர் வைத்துக் கொண்டு ’எதுவா இருந்தாலும் மேனேஜர்ட்ட பேசுங்க’ என பந்தா பண்ணும் நடிகைகளுக்கு முன்னால் இவரே பேசுவது சிலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.
 
‘ஏன் நீங்கள் மேனேஜர் வைத்துக் கொள்ளவில்லையா..?’ எனக் கேட்டால், ’நானும் முன்பு வைத்திருந்தேன். இப்போது யாரையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
அவர்களுக்கு அதிகம் கமிஷன் கிடைக்கும் என்பதற்காக என்னை கேட்காமலே சம்பளத்தை உயர்த்தி விடுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் யாரிடமும் நேரடியாக தொடர்ப்பு வைத்துக் கொள்ளமுடியாத அளவுக்கு ஒரு வளையத்தை ஏற்படுத்தி, ஒரு கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும் நினைக்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் மாதாமாதம் அவர்களின் சம்பளம் என்ற பெயரில் பெரும் தொகை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால் இந்த முடிவு’ என்கிறார் ஓவியா.

Comments