Wednesday,29th of May 2013
சென்னை::பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு படப்பிடிப்பின் போது தோள் பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இந்த மாத தொடக்கத்தில் நடந்த படப்பிடிப்பில், சண்டைக் காட்சியில் நடித்தபோது அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதற்காக லண்டனில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், தொடர்ச்சியாக படப்பிடிப்பு இருந்ததால் அவரால் லண்டன் சென்று ஆபரேஷன் செய்து கொள்ள முடியவில்லை. இதற்கிடையே, நேற்று அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தோள்பட்டையில் ஆபரேஷன் செய்யப்பட்டது.
தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் அவருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். பின்னர் வழக்கம்போல் அவர் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும், அதன்பிறகு 'ஹேப்பி நியூ இயர்' சினிமாவில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Comments
Post a Comment