Monday,27th of May 2013
சென்னை::சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் விளம்பரத் தூதராக இருந்தவர் நடிகை லட்சுமி ராய். அவரும் தற்போது சூதாட்டப் புகாரில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நெருக்கமாக உள்ளது போன்ற படங்கள் இணைய தளங்களில் அதிகம் உலா வருகின்றன.
இது குறித்து கருத்து கூறிய நடிகை லட்சுமி ராய் தான் முன்னர் சென்னை அணியின் விளம்பரத் தூதராக இருந்தது உண்மைதான் என்றும், அதன் பின்னர் தனக்கும் அந்த அணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். ஸ்ரீசாந்த்துடன் மலையாளத்தில் நடிக்கும்போதும், விளம்பரப் படங்களில் நடித்த போதும் எடுக்கப்பட்ட படங்கள் சில இணையதளத்தில் பரவி வருகின்றன என்றாலும், தனக்கு வேறு எதுவும் தொடர்பு இல்லை என்றும் கூறியிருக்கிறார் லட்சுமி ராய்.
இருந்தபோதும், ஸ்ரீசாந்த்தும், லட்சுமி ராயும் நெருக்கமாக பழகி வந்தவர்கள்தான். இணையத்தில் உலாவும் இந்தப் படங்களில் ஒரு படத்தில் ஸ்ரீசாந்த் மடியில் லட்சுமி ராய் சாய்வாகப் படுத்திருப்பது போலும், இன்னொரு படத்தில் லட்சுமி ராயை தூக்கியபடி ஸ்ரீசாந்த் போஸ் கொடுப்பது போலும் உள்ளன.
Comments
Post a Comment