Saturday,11th of May 2013
சென்னை::தமிழ் சினிமாவில் மலையாள நடிகைகளின் வரவு அதிகமாகவே இருந்து வரும் இந்த காலத்தில் அவர்களின் பேச்சுத் திறமைக்கும் குறைவே இல்லாமல்தான் இருக்கிறது.
சின்னப் பெண்ணாக இருந்தாலும் எதை பேச வேண்டுமோ அதை மட்டுமே பேசி பிழைக்கத் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
விரைவில் வெளிவர இருக்கும் ‘நேரம்’ , தனுஷ் நடிக்கும் ‘நய்யாண்டி’, ஜெய் நடிக்கும் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ஆர்யா நடிக்கும் ‘ ராஜா ராணி’ ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் ஹீரோயினாக நடித்து வருபவர் நஸ்ரிய நசீம்.
சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் உடன் நடிக்கும் ஹீரோக்களைப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்ட கேள்விக்கு, ‘‘நீ என் கூட நடிக்கிறேன்னு நியூஸ் வந்ததுமே, என்னைப் பத்திக் கேப்பாங்க. எதுவும் சொல்லக் கூடாதுனு’ ஆர்யா என்னை கிட்டத்தட்ட மிரட்டியிருக்கார்,” என பதிலளித்திருக்கிறார் நஸ்ரியா.
அப்படி என்ன மிரட்டினீங்க ஆர்யா ?
Comments
Post a Comment