Friday,10th of May 2013
சென்னை::இனியாவுக்கு இது செகண்ட் இன்னிங்ஸ். வாகை சூட வா படத்தில் கிடைத்த பெயரை தங்கர்பச்சானின் அம்மாவின் கைப்பேசி துடைத்து எறிந்தது. இனியா நன்றாகதான் நடித்திருந்தார். படம் நெடுக அழுது கொண்டிருக்கும் கேரக்டர், எப்படி அடுத்தப் படத்தில் ஒப்பந்தம் செய்வார்கள்?
மாசானி, புலிவால் என்று இரு படங்கள் கைவசம் இருந்தாலும் எப்போது வெளிவரும் என தெரியாது. இந்நிலையில் சென்னையில் ஒரு நாள் படத்தில் நடித்தார். கணவனுக்கு துரோகம் செய்து, அவனால் காரை ஏற்றி கவலைக்கிடமாகக் கிடக்கும் கதாபாத்திரம்.
சென்னையில் ஒரு நாள் படத்தைப் பார்த்த ரஜினி படத்தை பாராட்டியதோடு இனியாவையும் தனியாக குறிப்பிட்டு பாராட்டினார். அந்த மகிழ்ச்சி இப்போதும் இனியாவின் முகத்தில் தெரிகிறது. ரஜினியின் பாராட்டு கிடைத்ததால் இனி தமிழில் தனது எதிர்காலம் பிரகாசமடையும் என்பது இனியாவின் நம்பிக்கை. அதற்கேற்றபடி இயக்குனர் அமுதனின் படத்தில் கெஸ்ட் ரோல் செய்யும் வாய்ப்பு இனியாவுக்கு கிடைத்திருக்கிறது.
Comments
Post a Comment