ஐ படத்தில் மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக்ரம்!!!

Friday,3rd of May 2013
சென்னை::சமீபகால சினிமாவில் படத்துக்குப்படம் எதையாவது வித்தியாசமாக செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இயக்குனர்களுக்கும், நடிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. காரணம், ரசிகர்களின் எதிர்பார்ப்புதான். அந்த வகையில், வித்தியாசத்துக்கு பேர்போன நடிகரான விக்ரம், தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் ஐ படத்தில் பல மாறுபட்ட கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே அந்நியனில் மூன்றுவிதமான கெட்டப்பில் தோன்றியவர், இந்த ஐ படத்தில் மிருக மனிதனாகவும் ஒரு கெட்டப்பில் நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த கெட்டப்புக்கான காட்சிகளை தமிழ்நாட்டில் படமாக்கினால் இப்போதே செய்தி வெளியாகி விடும் என்பதால், அமெரிக்காவில்தான் அந்த காட்சிகளை படமாக்கியுள்ளாராம் ஷங்கர். சமீபத்தில் தான் நடித்த படங்களில் பெரிய அளவில் வித்தியாசம் காட்டி நடிக்காத விக்ரம், இதுமாதிரி இன்னொரு நடிகர் இப்படியொரு கெட்டப்பில் நடிக்கவே முடியாது என்கிற அளவுக்கு இந்த படத்தில் புகுந்து விளையாடியிருக்கிறாராம்.

Comments