Wednesday,1st of May 2013
சென்னை::விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 'தலைவா' திரைப்படம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துப்பாக்கி' வெற்றிக்குப் பிறகு விஜய் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் 'தலைவா'. ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால், ராகினி, ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில் இப்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாடல்கள் தயாராகிவிட்டதால் ஆடியோவை மே மாத இறுதியில் வெளியிடுவார்கள் எனத் தெரிகிறது. படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே மாதத்தில் தான் விஜய்யின் பிறந்தநாளும் வருகிறது. தனது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்று விஜய் விரும்புவதால், தலைவா படத்தை அவரது பிறந்தநாள் பரிசாக வெளியிட முடிவு செய்திருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments
Post a Comment