Wednesday,29th of May 2013
சென்னை::நயன்தாராவும், ஹன்சிகா மோட்வானியும் ஒருவர் படவாய்ப்பை இன்னொருவர் பறிப்பதாகவும், இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் செய்தி பரவியுள்ளது. இருவரும் தமிழ், தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகைகளாக உள்ளனர்.
நயன்தாரா தற்போது அஜீத் ஜோடியாக பெயரிடப்படாத படத்திலும், ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ‘இது கதிர் வேலன் காதலி’ ஆகிய படங்களில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் ‘அனாமிகா’ என்ற பெயரில் தயாராகும் இந்தி ரீமேக் படமான ‘கஹானி’யிலும் கர்ப்பிணி வேடத்தில் நடிக்கிறார்.
ஹன்சிகா ‘சிங்கம்-2’ படத்தில் சூர்யா ஜோடியாகவும், ‘பிரியாணி’ படத்தில் கார்த்தியுடனும் நடிக்கிறார். சிம்புவுடன் நடிப்பதாக இருந்த ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ படங்கள் கைவிடப்பட்டது.
சமீபத்தில் நயன்தாராவுக்கு வந்த சில படவாய்ப்பு கம்பெனிகளை ஹன்சிகா அணுகி தனக்கு சான்ஸ் கேட்டதாக கூறப்பட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு தெரிந்து ஹன்சிகாமேல் கோபப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து ஹன்சிகாவிடம் கேட்டபோது மறுத்தார்.
நயன்தாரா படவாய்ப்புகளை நான் பறிக்க வாய்ப்பே இல்லை. அவர் என் மேல் கோபப்படவில்லை. ஏதேனும் வருத்தம் இருந்தால் என்னிடமே அதுகுறித்து பேசி இருப்பார். என்னை பொறுத்தவரை நான் யார் மீதும் கோபப்படமாட்டேன். நேர்மையாக இருக்கிறேன் என்றும் ஹன்சிகா தெரிவித்தார்.
காதல் பற்றி கூறும்போது, என்னை நிறைய பேர் காதலிக்கின்றனர். நான் யாரையும் காதலிக்கவில்லை என்றார்.

Comments
Post a Comment