சிவகார்த்திகேயனுக்காக கதை தேடிய தனுஷ்!!!

Friday,3rd of May 2013
சென்னை::தனுஷ், சொந்த நிறுவனத்தை தொடங்கி முதல் முறையாக 'எதிர் நீச்சல்' படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தின் கதைக்கு சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என்றும் அதனால் தான் இந்த படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் சிவகார்த்திகயேனை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதற்காகவே தனுஷ் கதை தேடிக்கொண்டிருந்துள்ளார்.

சமீபத்தில் எதிர் நீச்சல் படத்தின் புரொமோஷனுக்காக எஃப்.எம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தனுஷ், புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் இந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்தேன். இதை ஆரம்பித்ததும், வெற்றி மாறனின் உதவியாளர்களிடம், சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படம் பண்ண யாராவது கதை வைத்திருந்தால், நான் தயாரிக்கிறேன் என்று கூறினேன். அப்படித்தான் இந்த படம் ஆரம்பித்தது என்று கூறியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அத்துடன் இப்படத்தை தனுஷ் நல்ல விலைக்கு வேந்தர் மூவிஸுக்கு விற்றுவிட்டார். கிட்ட தட்ட எதிர் நீச்சல் படம் ஹீரோ சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் தனுஷ் அனை அனைவருக்குன் நல்ல லாபத்தையே கொடுத்திருக்கிறது.

Comments