ரசிகர்களை `மச்சான்' என்று அழைப்பது ஏன்?: நமீதா விளக்கம்!!!

Friday,10th of May 2013
சென்னை::நடிகை நமீதா எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்களில் கவர்ச்சியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் தன்னுடைய ரசிகர்களை மச்சான் என்று செல்லமாக அழைப்பது வழக்கம். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

சென்னை ரொம்ப பிடிக்கும். இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். சொந்தமாக வீடும் உள்ளது. ஊழியர்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். சென்னையை விட்டு எங்கும் போகமாட்டேன். திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன். ரசிகர்களை மச்சான் என்று அழைப்பது பிடிக்கும். சினிமாவுக்கு வந்த போது படப்பிடிப்பில் லைட்பாய் முதல் எல்லோரும் ஒருத்தரை யொருத்தர் மச்சான் என்று அழைப்பதை பார்த்து இருக்கிறேன். அதில் அன்பு இருந்தது. அந்த வார்த்தை என்னை கவர்ந்தது.

எனவே நானும் ரசிகர்களை மச்சான் என்று அழைக்க துவங்கினேன். ரசிகர்களால் தான் நான் இன்னும் சென்னையில் இருக்கிறேன். இணைய தளங்களில் எனது படங்கள் பதவிறக்கம் செய்யப்பட்டு உள்ளன. ஐப்பானியர்கள் இந்தியாவின் அழகான பெண் என எனக்கு மரியாதை அளித்துள்ளனர். இவையெல்லாம் ரசிகர்களால் தான் எனக்கு கிடைத்தது,  அவர்கள் எனக்கு கோவிலும் கட்டி உள்ளனர். என் மீது அன்பும்  மரியாதையும் வைத்து இருக்கிறார்கள்.

இவ்வாறு நமீதா கூறினார்.
tamil matrimony_INNER_468x60.gif

Comments