இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம்: முதல்வருக்கு நேரில் சென்று அழைப்பு!!!

Wednesday,22nd of May 2013
சென்னை::பிரபல இசையமைப்பாளர், ஜி.வி.பிரகாஷ் குமார் - பின்னணி பாடகி, சைந்தவி திருமணம் வரும், ஜூன், 27ம் தேதி சென்னையில் நடக்கிறது.
தமிழில், வெயில் திரைப்படம் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர், பரதேசி, அன்னக்கொடி உட்பட, 25 படங்களுக்கு இசையமைத்துள்ளார். மதயானை கூட்டம் படத்தை தயாரித்து வருகிறார்.
 
அதோடு பெயரிடப்படாத தமிழ்ப் படத்தில் கதாநாயகனாகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரும், கர்நாடக இசைப் பாடகியும், சினிமா பின்னணி பாடகியுமான, சைந்தவியும், நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு, இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டனர்.
 
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் - பின்னணி பாடகி சைந்தவி திருமணம் வரும் ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான அழைப்பிதழை முதல்வருக்கு ஜிவி பிரகாஷ் குடும்பத்தினர் நேரில் சென்று கொடுத்தனர். ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரின் பெற்றோரும் இணைந்து அழைப்பிதழ் கொடுத்தனர். புதுமணத் தம்பதிகளாகப் போகும் ஜிவி பிரகாஷையும் சைந்தவியையும் முதல்வர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

Comments