தயாரிப்பாளர் தேடும் ஜெய்!!!

Wednesday,1st of May 2013
சென்னை::சில நடிகர்களை போல் ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்காதவர் ஜெய். ஒவ்வொரு படமாகத்தான் நடிப்பார். அப்படியிருந்தும் அவரது தோல்விகள் தவிர்க்க முடியாததாகி வந்தன. இந்த நிலையில், எங்கேயும் எப்போதும் படத்துக்குப்பிறகு ஜெய்க்கு சில நல்ல படங்களும் கிடைத்தன. அதில் கவுதம்மேனன் தயாரித்த தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் படம் ஒன்று. இந்த படத்திற்கு நாயகி தேடுவதில் ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட சிக்கல் நீடித்தது.

பின்னர் ஒருவழியாக படப்பிடிப்பை தொடங்கினார்கள். ஆனால், என்னகாரணமோ தற்போது படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளாராம் கவுதம்மேனன். அதோடு யாராவது படத்தை வாங்கி மீதி படத்தை முடித்து வெளியிட முன்வந்தாலும் தயாராக உள்ளாராம். இதனால் நொந்து போன ஜெய், ஒரு நல்ல படம் இப்படி அல்லோல்படுகிறதே என்று தனக்கு வேண்டப்பட்ட சில தயாரிப்பாளர்களிடம் பேசி வருகிறார். இந்த படத்தை நீங்கள் கைமாற்றிக்கொண்டால், படத்தை வெளியிடும்போது நல்ல லாபம் கிடைக்கும் என்று அவர்களை இழுத்து வருகிறாராம். ஆனபோதும், கவுதம்மேனனே கைவிட்ட படம் என்பதால், கைகொடுக்க இதுவரை யாரும் முன்வரவில்லையாம்.

Comments