Friday,24th of May 2013
சென்னை::ஷாரூக்கான், தீபிகா படுகோனே, சத்யராஜ், மனோரமா, நடிப்பில் ரோஷித் ஷெட்டி இயக்கத்தில் தயராகி வரும் படம் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’.
தமிழ்ப் பெண்ணான தீபிகா படுகோனேவை காதலித்து கரம் பிடிக்க ஷாரூக்கான் என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இப்படத்தின் டைட்டில் டிராக்கை நேற்று வெளியிட்டிருக்கிறார்கள்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல பின்னணி பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஹிந்தியில் மீண்டும் பாடிய பாடல் இது என்ற அறிவிப்புடன் இந்த டைட்டில் டிராக் வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட ஒரு நாட்களுக்குள்ளாகவே 47,000 பேர் வரை கண்டு ரசித்துள்ளனர்.எஸ்பிபியின் ஹிந்தி குரலை நீண்ட நாட்கள் கழித்து கேட்பதே தனி மகிழ்ச்சிதான்…
Comments
Post a Comment