எவ்வளவு பணம் கொடுத்தாலும் பாலியல் தொழிலாளி வேடம் வேண்டாம் கறார் காவ்யா!!!

Thursday,2nd of May 2013
சென்னை::எவ்வளவு பணம், விருது கொடுத்தாலும் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க மாட்டேன் என்றார் காவ்யா மாதவன்.‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா, ‘வானம்’ படத்தில் அனுஷ்கா தெலுங்கு படமொன்றில் சார்மி போன்றவர்கள் பாலியல் தொழிலாளி வேடங்களில் நடித்திருக்கின்றனர். இதுபோன்ற வேடங்களில் நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்பிருப்பதுடன், விருதுகளை வெல்லும் வாய்ப்பும் உள்ளது. இதனால் இதுபோன்ற வேடங்களை ஹீரோயின்கள் ஏற்கின்றனர்.

‘காசி’, ‘என் மன வானில்’, ‘சாது மிரண்டால்‘ போன்ற படங்களில் நடித்திருக்கும் காவ்யா மாதவனுக்கும் சமீபத்தில் மலையாள படமொன்றில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இது பற்றி அவரிடம் கேட்டபோது பரபரப்பான பதில் அளித்தார். அவர் கூறும்போது, ‘இதுபோன்ற வேடத்தை ஏற்க சம்மதித்தால் எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கிடைக்கும். விருதுகளும் வரும்.

ஆனால் அது எனக்கு தேவையில்லை. ஒருபோதும் இதுபோன்ற வேடத்தில் நான் நடிக்க மாட்டேன். இதுபோன்ற வேடங்களை ஏற்று, தரக்குறைவான வார்த்தைகளை பேசி நடிக்க என்னால் முடியாது. அந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ப கவர்ச்சி காட்டியும் என்னால் நடிக்க முடியாது என்றார்.

Comments