கமல் ஜோடியாகும் காஜல் அகர்வால்!!!

Tuesday,28th of May 2013
சென்னை::விஜய், சூர்யா, கார்த்தி போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை காஜல் அகர்வால் அடுத்தப்படியாக நடிகர் கமல்ஹாசனுடன் ஜோடி போட இருக்கிறார். பாரதிராஜாவின் பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை காஜல் அகர்வால். தொடர்ந்து பழனி, மோதி விளையாடு, நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்தவர் கடந்தாண்டு சூர்யாவுடன் மாற்றானிலும், விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் நடித்தார். இதில் துப்பாக்கி படம் சூப்பர்-டூப்பர் ஹிட்டாக மீண்டும் விஜய்யுடன் ஜோடியாகி சேர்ந்துள்ளார். தற்போது விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்து வருகிறார் காஜல். இப்படத்தின் கதை மதுரையை பின்புலமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்தபடியாக நடிகர் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் நடிக்க காஜலுக்கு வாய்ப்பு வந்துள்ளது. விஸ்வரூபம்-2 படத்திற்கு கமல், லிங்குசாமி தயாரிக்கும் படத்தை இயக்கி, ஹீரோகவும் நடிக்கிறார். இப்படத்தில் கமல் ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவரும் சம்மதம் சொல்லிவிட்டதாக தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.

Comments