சிம்பு ஒன்றும் எனக்கு ஸ்பெஷல் இல்லை! ஹன்சிகா ஆத்திரம்!!!

Wednesday,8th of May 2013
சென்னை::ஹன்சிகாவின் மார்க்கெட்டை சரிக்க திட்டமிட்ட சிலர், அவருக்கும், சிம்புவுக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டு எரிவதாக ஒரு வதந்தியை கொளுத்தி போட்டுள்ளனர். இந்த மாதிரி காதல் வதந்திகள் நிறைய சந்தித்தவர் என்பதால் இதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை சிம்பு. ஆனால், ஹன்சிகாவோ இதன்காரணமாக தனது மார்க்கெட் சரிந்து விடுமோ என்று செம ஆத்திரமடைந்துள்ளார்.

அதிலும், சிம்புவின் வேட்டை மன்னன், வாலு என்ற இரண்டு படங்களில் நடிக்கும் ஹன்சிகா அவரைத்தான் தனது ஸ்பெஷல் ஹீரோவாக நினைக்கிறார் என்ற விசயத்தை இந்த வதந்தியில் முக்கியத்துவப்படுத்தியிருப்பதால், மற்ற ஹீரோக்களுக்கு தன் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஒவ்வொருத்தருக்கும் போன்போட்டு இந்த வதந்தியை பற்றி கிளியர் பண்ணி வருகிறார் ஹன்சிகா.

மேலும், மற்ற ஹீரோக்களையெல்லாம் காக்க வைத்து விட்டு சிம்புவுக்கு மட்டும் தான் கேட்ட நேரத்திளெல்லாம் கால்சீட் கொடுத்ததாக பரவிய செய்தியையும் மறுத்துள்ள ஹன்சிகா, நான் மற்ற ஹீரோ படங்களுக்கு கொடுப்பது போல்தான் அவருக்கும் கொடுக்கிறேன். அவரும் எனது கால்சீட்டுக்காக சில மாதங்களாக காத்திருந்தார் என்றும் கூறி வருகிறார்.

Comments