கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது!!!
Thursday,2nd of May 2013
சென்னை::கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது.சூர்யா, கௌதம் மேனன் முதன் முதலாக சேர்ந்த காக்க காக்க படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதையடுத்து அவர்கள் வாரணம் ஆயிரம் படத்தில் சேர்ந்து பணியாற்றினர். தற்போது துருவ நட்சத்திரத்திற்காக மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்
துருவ நட்சத்திரத்தின் துவக்க விழா சென்னையில் உள்ள கௌதம் மேனனின் போட்டான் கதாஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 7.30 மணிக்கு துவங்கிய விழாவில் சூர்யா, பார்த்திபன், இயக்குனர்கள் ராம், பிரேம் சாய், விக்னேஷ், எழுத்தாளர் சாரு நிவேதா, மதன் கார்க்கி, வசந்த பவன் ரவி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.சூர்யா சிங்கம் 2 படப்பிடிப்பில் இருந்து ஒரு நாள் லீவு எடுத்துவிட்டு இங்கு வந்தார்.
Comments
Post a Comment