குறும்பட இயக்குனர் இயக்கும் படம்: நே!!!

Monday,27th of May 2013
சென்னை::தமிழ் சினிமாவில் அர்த்தமுள்ள வரவுகளும் அவ்வப்போது இடம் பெறுவது உண்டு .திரைப்படம் உருவாக்குவதை ஒரு தொழிலாக கருதாமல் அனுபவமாக எண்ணி வருவோரும் இருக்கத்தான் செய்கிறார்கள் .அப்படி ஒரு நல்லவராக வந்து இருப்பவர் தான் புஸ்கின் ராஜா .இவர் இயக்க இருக்கும் படம் தான் ‘நே’.இப்படம் கிரைம் த்ரில்லராக உருவாகி உள்ளது . 
நே என்றால் நேயம் ,அன்பு ,ஈரம் ,இரக்கம் என பல பொருள் படும் .ஆனால் இந்த எந்த வித அன்பும் இரக்கமும் ஈரமும் இல்லாமல் வாழ்கிற சிலர் பற்றிய கதை தான் நே .

தினசரி பத்திரிக்கைகளை புரட்டினால் நம் கண்ணில் வித விதமான குற்ற செயல்கள் படுகின்றன .சிறுவர்கள் செய்யும் குற்றங்கள் ,தகாத உறவுகள் ,பாலியல் குற்றங்கள் என்று தினம் தினம் நடக்கின்றன .அப்படி கேள்வி பட்ட எங்கோ நடந்த சம்பவங்கள் தான் கதை .மூன்று பேர் மூன்று சம்பவங்களுடன் மூன்று கதை தான் இடம் பெறும் .அவை எப்போது
எந்த புள்ளியில் சந்திக்கின்றன என்பதே கிளைமாக்ஸ் .

பொதுவான திரைக்கதை நெறிகளை பின்பற்றாமல் அதை உடைக்கும் வகையில் புதிய திரைக்கதை மொழியை உருவாக்க முயற்சித்து உள்ளார் இயக்குனர் புஸ்கின் ராஜா .இவர் இதற்கு முன்பு அக் க்ஷன்(Action) என்னும் குறும் படத்தை இயக்கி 2012 நார்வே பிலிம் பெஸ்டிவலில் தேர்வு ஆனது .அது மிகவும் பாராட்ட பட்டது .இவர் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாதவர் என்பது மிகவும் குறிப்பிடதக்கது கதை ,திரைக்கதை ,தயாரிப்பு ,இயக்கம் -புஸ்கின் ராஜா, வசனம் -சாரு நிவேதிதா, ஒளிப்பதிவு -வீர குமார் (ஒளிப்பதிவாளர் செழியனின் சகோதரர்)
இணை தயாரிப்பாளர்கள் -டாக்டர் டேவிட் தெய்வ விநாயகம் ,ஹரி பாபு ,ராஜேஷ் குமார் .தயாரிப்பு நிறுவனம் -Mafie Productions.

Comments