Monday,20th of May 2013
சென்னை::6’ படத்தில் நடித்து வரும் ஷாம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவருடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்.
முதலாவது மகிழ்ச்சி மீண்டும் தெலுங்குப் படத்தில் நடிப்பது, இரண்டாவது அவர் நடித்து வரும் ‘6’ படத்தின் வினியோக உரிமையை 3 நிறுவனங்கள் வாங்கியிருப்பது.
தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டியுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார் ஷாம். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஷாம் முதன்முறையாக நடித்த படம் ‘கிக்’ (Kick).
தெலுங்குத் திரையுலகில் இந்தப் படம் வெளிவந்து 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ரவிதேஜாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
ஒரு இடைவேளைக்குப் பின் கிடைத்த அந்த வெற்றி தெலுங்குத் திரையுலகிற்கே ஒரு புத்துணர்ச்சி கொடுத்தது என்றால் மிகையாகாது. ‘கிக்’ தமிழில் ‘தில்லாலங்கடி’ என்கிற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் ஏற்று நடித்த கதாபாத்திரத்திலேயே தமிழிலும் நடித்தார் ஷாம்.
அதன் பிறகு சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் ‘ஒசரவள்ளி’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த ஷாம் மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் ‘ரேஸ்குர்ரம்’ (Racegurram) என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
ஷாம் குறித்து இயக்குனர் சுரேந்தர் ரெட்டி கூறும்போது, “என்னைப்பொருத்தவரையில் ஷாம் ஒரு லக்கி சார்ம் (Lucky Charm) நானும் அவரும் இணைந்து பணியாற்றும் படங்கள் அத்துனையும் வெற்றிப்படங்களே! இந்தப் படத்தில் ஒரு ஃபன் லவிங் பாயாக (Fun Loving Boy) நடிக்கவிருக்கிறார். தொடர்ந்து அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது,” என்றார்.
இயக்குனர் வி. இசட். துரை இயக்கத்தில் வித்தியாசமான கெட் அப்புகளில் ஷாம் நடித்திருக்கும் ‘6’ படத்தின் விநியோக உரிமையை ஸ்டுடியோ 9 மற்றும் அபி & அபி, வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வெளியிட உள்ளன. ஸ்ரீகாந்த் தேவாவின் அதிரடி இசையில் உருவான ‘6 ’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றிருக்கும் நிலையில் படமும் விரைவில் வெளியாகவுள்ளது.
Comments
Post a Comment