Wednesday,1st of May 2013
சென்னை::சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்து தொடர்ந்து மனம் கொத்தி பறவை, 3, கேடி பில்லா கில்லாடி ரங்கா என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போது தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று (மே-1ம் தேதி) ரிலீசாகியுள்ளது. தனது திரையுலகம் அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன் நம்மோடு பகிர்ந்து கொண்ட சில தகவல்கள் இதோ...
* காமெடி படங்களில் மட்டுமே நடிக்கிறீர்களே?
என்னை, காமெடி கதைகள் தான், தேடி வருகின்றன. இளம் தலைமுறையினர், படம் ஜாலியாக இருக்க வேண்டும் என, விரும்புகின்றனர். இதை நினைத்து, டைரக்டர்கள் கதை பண்ணும் போது, யாரை நடிக்க வைத்தால், படம் நன்றாக வரும் என, மனதுக்குள் கணக்கு போடுகின்றனர். அந்த கணக்கு, நமக்கு ஒர்க் அவுட் ஆகி விடுகிறது.
* நீங்கள் ரோல் மாடலாக நினைக்கும் ஹீரோ யாரு?
தமிழ் சினிமாவில், எல்லா ஹீரோக்களையும் எனக்கு பிடிக்கும். ஒவ்வொருத்தரையும், ஒவ்வொரு வகையில் எனக்கு பிடிக்கும். சினிமாவில், கமர்ஷியல் ஹீரோவாக, ரசிகர்களிடம் நிலைச்சு நிற்கிறது சாதாரணமானதல்ல. இதற்கு நிறைய ஈடுபாடும், உழைப்பும் முக்கியம். வெற்றியை தக்கவைக்க, ஹீரோக்கள், உள்ளுக்குள் படும் கஷ்டம், யாருக்கும் தெரியாது.
* அதிக சம்பளம் கேட்பதாக கோலிவுட்டில் பேசப்படுகிறதே?
கேள்விப்பட்டேன். என்னை வைத்து படம் எடுத்திருக்கும், தயாரிப்பாளருங்களை. இயக்குனருங்களை கேட்டா, உண்மை நிலை தெரியும். உடனே, கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கிறேன்னா எப்படீங்க...அவசரப்பட்டு முடிவு எடுப்பவன் நானல்ல. தயாரிப்பாளர் தயங்கும் அளவிற்கு, என் சம்பள முடிவில் அதிரடி இருக்காது. இப்படியெல்லாம் பில்டப் கொடுத்து கவுத்துடாதீங்க சாமி.
* "எதிர்நீச்சல் படம் எப்படி வந்திருக்கு?
நடிகர் தனுஷ் தான், இந்த படத்துக்கு என்னை பரிந்துரை செய்தார். அவர் தான், இந்த படத்தின் தயாரிப்பாளர். முந்தைய படங்களைவிட, வித்தியாசமான பரிமாணத்தில், என் நடிப்பு இருக்கும். அது எப்படின்னு, படம் வந்ததும் பார்த்துட்டு சொல்லுங்க. அதுவரை, சஸ்பென்ஸ் நீடிக்கட்டுமே...
* தனுசுடன் நட்பு எப்படி?
அவரது நடிப்பு பிடிக்கும். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய "3 படத்தில் நடிக்கும் போது, தனுஷுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவருடைய பந்தா இல்லாத அணுகுமுறை எனக்கு பிடிச்சிருந்தது. "எதிர்நீச்சல் படத்தில் நடிக்க அழைச்சதும், சரின்னுட்டேன். படம் முடிச்சதும், பார்த்து ராட்டினார். சந்தோஷமா இருக்கு. ஹீரோக்களிடம் பாராட்டு பெறுவது சாதாரணமாங்க...

Comments
Post a Comment