அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்!!!

Sunday,26th of May 2013
சென்னை::தமிழில் விகடகவி என்ற படத்தில் அறிமுகமானவர் அமலாபால். அதையடுத்து வீரசேகரன் என்ற படத்தில் நடித்தவர் சிந்துசமவெளி படத்தில் மாமனாருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காமக்கொடூரமான வேடத்தில நடித்தார். அப்போது தனது பெயரை அனகா என்றும் வைத்திருந்தார். ஆனால், இந்த படத்தில் அவரது இமேஜ் சுத்தமாக அவுட்டாகி விட்டது. அதனால் இந்த படத்தோடு அனகாவின் மார்க்கெட் காலியாகிவிடும் என்றுதான் பலரும் நினைத்திருந்தார்கள்.

இருப்பினும் மைனா படத்துக்கு அனகாவை புக் பண்ணி மீண்டும் அவரது பழைய நாமகரணத்தையே அமலாபால் என்று சூட்டினார் பிரபுசாலமன். அவரைப்பொறுத்தவரை அப்போது குறைந்த சம்பளத்தில் ஒரு நடிகை வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அந்த படமே அமலாபாலின் சினிமா கேரியரை புரட்டிப்போட்டது. படத்தின் வெற்றி காரணமாக அடுத்து உடனடியாக விக்ரமுடன் நடித்தவர், இப்போது தலைவாவில் விஜய்யுடனும் நடித்து உச்ச நடிகையாகி விட்டார்.

அதனால் இதே வேகத்தில் அஜீத், சூர்யா என்று அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து தன்னை இன்னும் உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார் அமலாபால். தற்போது தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அவர், அவ்வப்போது சென்னைக்கும் விசிட் அடித்து, மேற்படி நடிகர்களை வைத்து படம் பண்ணும் கம்பெனிகளுக்கு ஏறி இறங்கிக்கொண்டிருக்கிறார். தற்போதைய நிலவரப்படி அமலாபாலை வைத்து படம் பண்ணினால், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படத்தை ரிலீஸ் பண்ணலாம் என்கிற நிலை இருப்பதால், சில கமர்சியல் படாதிபதிகள் அமலாபால் பக்கம் சாய்ந்துள்ளனர். இதனால் தலைவாவுக்குப்பிறகு தமிழில் அவர் மீண்டும் பிசியாகி விடுவார் என்று தெரிகிறது.

Comments